கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர்: விஜய் மீது தமிழிசை சாடல்

சென்னை:

ள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்று கூறிய தமிழிசை, முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் என்று நடிகர் விஜயையும் கடுமை சாடினார்.

தீபாவளியான நாளை வெளிவர உள்ள விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தின் கதை திருட்டுக்கதை என சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் சமரசமாக முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,  ‘இன்று முதல்வர் பதவி ஆசையோடுதான் நடிக்கவே வருகிறார்கள். அப்படிப்பட்ட கனவோடு வருபவர்கள் சினிமாவில் மட்டும் முதல்வராக நடித்து விட்டுப்போகவேண்டியது தான். ஒரு காலத்திலும் அரசியலில் முதல்வர் ஆகமுடியாது என்று விஜயை கடுமையா சாடினார்.

சொந்தமாக கதை கூட பண்ணத்தெரியாமல், கள்ளக்கதையை படம்  எடுப்பவர்கள்தான் இன்று கள்ள ஓட்டைப்பற்றி படம் எடுக்கிறார்கள். இது கார்ப்பரேட்களின் காலம் அல்ல. காமன்மேன்களின் காலம் என்று சன் பிக்சர்சையும் குற்றம் சாட்டினார்.

சர்க்கார் படத்தில் நடித்துள்ள  நடிகர் விஜயிடம் நேர்மை இல்லை என்று குற்றம் சாட்டியவர்,  இனியாவது அவர் பொதுவாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்’ என்றும் கூறி உள்ளார்.