சென்னை:
டும் ரெயிலில் திருடப்பட்ட 5 கோடியே 75 லட்சம் ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது.
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் நடந்த கொள்ளை பற்றி பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
ரெயில் பெட்டியில் அனுப்பப்பட்ட பணம் விவரம்:  மொத்தம் 226 பெட்டிகளில் பணம் அனுப்பப்பட்டு உள்ளது. சேலம் இந்தியன் வங்கி – 43 பெட்டி, சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 83 பெட்டி,  சேலம் அருகே உள்ள ராசிபுரம் எஸ்பிஐ – 42 பெட்டி. கிருஷ்ணகிரி  இந்தியன் வங்கி – 38 பெட்டி. சத்தியமங்கலம் எஸ்பிஐ வங்கி – 20 பெட்டி. மொத்தம் 226 பெட்டிகளில் 342 கோடியே 75 லட்சம் ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
அவற்றில் சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை சேர்ந்த 5.75 கோடி ரூபாய் பணத்தை மட்டும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில், டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 9 பேர் கொண்ட போலீஸார் பாதுகாப்புக்காக பயணம் செய்தனர். அவர்களிடம் பாதுகாப்புக்காக 2 கை துப்பாக்கிகள், 2 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 இன்சாஸ் ரக துப்பாக்கிகள், 2 எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் இருந்தன.
இந்த சம்பவம் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரெயில்வே கோட்ட பாதுகாப்பு ஆணையர் ராஜ்மோகன்,

ரெயில் பாதையின் வரைபடத்தை கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சேலத்திலிருந்து விருதாச்சலம் வரையிலான பாதையில் மின் இணைப்பு இல்லை என்பதால் அந்த பகுதியில்தான் கொள்ளை நடந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளது.
ரெயில் பெட்டியில் போடப்பட்டுள்ள துளையை பார்க்கும் போதும்,அது வெல்டிங் இயந்திரம் கொண்டு துளையிடப்பட்டது போல தெரியவில்லை.பெரிய கத்தரிக்கோலை கொண்டு ரெயில் பெட்டியின் மேல்பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.அனைத்து கோணங்களிலும் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்.இந்த கொள்ளை பல நாட்களாக திட்டமிட்டு நடத்தப்பட்டது போல தெரிகிறது.”
ரெயிலில் கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்வது கொள்ளையர்களுக்கு எப்படி தெரியும் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பணத்தை அனுப்பிய பாங்கி அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், போர்ட்டர்கள், பணத்தை வேனில் ரெயில் நிலையத்துக்கு ஏற்றி வந்த டிரைவர்கள் மற்றும் அந்த பணத்தை ஏற்றி அனுப்பும் காண்டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என கூறினார்.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் 4 பேரின் கைரேகைகள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள் ளையர்கள் மிகவும் துணிச் சலுடன் சினிமா பாணியில் கைவரிசை காட்டியுள்ளனர். ரெயிலின் மேற்கூரையில் ஒரு ஆள் நுழையும் அளவுக்கு மட்டும் ஓட்டை போட்டு ரூ.6 கோடி பணத்தை கொள்ளையடித்து விட்டு கொள்ளை கும்பல் தப்பிச் சென்றுள்ளது. கொள்ளைய டிக்கப்பட்ட இந்த பணத்தின் மொத்த எடை 150 கிலோ வாகும்.
எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை மண்டல கமிஷனர் அஷ்ரப் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநில ரெயில்வே போலீசாரும் ஐ.ஜி.ராம சுப்பிரமணி தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டி.ஐ.ஜி. பாஸ்கரன், சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 தனிப்படையினர், கொள்ளையர்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளனர்.
ரெயிலில் பண பெட்டிகளுக்கு பாதுகாப்புக்கு வந்த ரெயில்வே பாதுகாப்புபடை  போலீசாரிடம்  தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் செல்போன்களை பெற்று தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.