வைகோ மீது  கல் வீசிய பாஜக : பிரசார போராட்டத்தில் வன்முறை

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிரசாரப் போராட்டம் நடத்தி வரும்  வைகோ மீது பாஜகவினர் கல்வீசி தாக்க முயன்றனர்

மதிமுக தலைவர் வைகோ தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரிக்கை விடுத்து பிரசாரப் போராட்டம் நடத்தி வருகிறார்.   அவர் நேற்று உடன்குடி அருகே தனது பிரசாரப் போரட்டத்தை நிகழ்த்தி வந்தார்.   அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட பாஜக மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் பாஜகவினர் கூடி இருந்தனர்.

காவல்துறையினர் வைகோவை மார்றுப் பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.    ஆனால் வைக்கோ திட்டமிட்ட பாதையில் சென்றுள்ளார்.   மேலும் பாஜகவினரை பார்த்ததும்,  தாம் பிரதமர் மோடியைப் போல கருப்புக் கொடியைக் கண்டு பயந்து ஓடப்போவதில்லை என பேசி உள்ளார்.   இதனால் மதிமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்ட்டது.

கூஉட்டத்தில் சிலர் வைகோ மீது கல் வீச்சு நடத்தி தாக்க முயன்றுள்ளனர்.   காவல்துறையினர் தடியடி நடத்தி பாஜகவினரை கலைத்துள்ளனர்.   இந்த தடியடியில் பாஜகவின் 6 தொண்டர்கல் காயம் அடைந்துள்ளனர்.    அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.