பெங்களூரு

ன்று கர்நாடகா அரசு கொண்டாடும் திப்பு ஜெயந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்து மீது கல்வீச்சு நிகழ்ந்துள்ளது.

மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் பிறந்த நாளான நவம்பர் 10 ஆம் தேதியை கர்னாடக அரசு விமர்சையாக கொண்டாடி வருகிறது.   இதற்கு இந்துத்துவா அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.  பாஜக, ஆர் எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அரசு இன்று திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடி வருகிறது.

இன்று காலை கர்னாடகா மாநிலம் மதிகேர் அருகே 8 மணி அளவில் கர்னாடகா அரசு பேருந்து மீது கல்வீச்சு  நிகழ்ந்துள்ளது.  இந்த தகவலை கர்நாடகா மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.   மதிகேரியில் பா ஜ கவினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.  அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதனால் கர்னாடகாவில் பல இடங்களில் பதட்டம் நிலவுகிறது.  இந்தப் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளனர்.