டில்லி:

வெள்ளப் பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல்காந்திமீது பாரதியஜனதாவினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதுபாரதியஜனதாவின் அரசியல் கலாச்சாரம் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத்துக்கு ராகுல் காந்தி சென்றபோது நேற்று அவரது கார் மீது கல்வீச்சு நடந்தது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பாரதியஜனதா கட்சி எந்தவித வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் தனது ஓட்டை பதிவு செய்த பின்னர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது, குஜராத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க   நான் சென்ற திசையில், பா.ஜ., தொண்டர் ஒருவர் கல்வீசினார். அது, எனது தனிப்பாதுகாப்பு அலுவலரை தாக்கியது.

பாஜகவின் அரசியல் கலாச்சாரம்தான் இது என்ற ராகுல், வன்முறை அரசியலை பாரதிய ஜனதா கட்சி நடத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அரசியல். இந்த சம்பவத்தின் பின்னணியில் அவர்கள் இல்லாததால் ஏன் கண்டனம் தெரிவிக்க போகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.