Random image

அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகம் மீது கல்வீச்சு: விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்:

மிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகத்தின் அலுவலகத்தின்மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் சட்டத்துறை அமைச்சராக இருந்து வருபவர் சி.வி. சண்முகம். இவர் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். இவரது தொகுதியில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகே செயல்படுகிறது. இதன்மூலம் தொகுதி மக்களின் நிறை குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  இன்று காலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அமைச்ச ரின் சட்டமன்ற அலுவலகம் மீது  கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற னர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடடினயாக சம்பவ இடத்துக்கு வருகை தந்து, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.