திருச்சி,

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  பிறந்தநாள் பொதுகூட்டத்தில் பேசிய தமிழக அமைச்சர் வெல்லமண்டி நடிராஜன் மீது கல்வீசப்பட்டது.

திருச்சி அருகே உள்ள, பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரே  ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் வளர்மதி மற்றும் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இரவு மணி அளவில் கூட்டத்திற்கு வந்த அமைச்சர்கள் பேச ஆரம்பித்தனர். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து கற்கல் மேடையை நோக்கி வந்தது.

முதலில் அவசரம் அவசரமாக வளர்மதி பேசி முடித்தும், வெல்லமண்டி நடராஜன் பேச ஆரம்பித்தார்.  அப்போது மேடையை நோக்கி கற்கள் வரத்தொடங்கின. அதில் ஒரு கல் அமைச்சரின் கால் பக்கம் விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன்,  ‘எப்படி மிரட்டினாலும், எங்களின் பொதுச்செயலர் சசிகலா தான் அதை யாராலும் மாற்ற முடியாது’ என ஆவேசமாக பேச தொடங்கினார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. கல்வீசியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் இலவச சேலைகள் வழங்கப்படும் என ஆசைகாட்டி பெண்களை கூட்டி வந்துள்ளனர். விழாவில் அவர்களை தவிர பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இதேபோல், திருச்சி மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர் துவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு சட்டையுடன்  தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில் ஏராளமானோர் கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு காரணமாக  சேம்பரசம் பேட்டை பகுதியில் நடைபெற இருந்த  பள்ளி குழந்தைகளுக்கு சைக்கில் கொடுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.