காஷ்மீர் கல்வீச்சில் பலியான வாலிபர் உடல் சென்னை வந்தது

சென்னை:

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அங்கு சுற்றுலா சென்ற சென்னை ஆவடியை சேர்ந்த திருமணி (வயது 22) காயமடைந்தார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருமணியின் குடும்பத்தாருக்கு 3 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருமணியின் உடல் காஷ்மீரில் இருந்து விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் வந்தடைந்தது. அங்கிருந்து ஆவடியில் உள்ள அவரது வீட்டுக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: stone thrown victim's body in Kashmir came to Chennai, காஷ்மீர் கல்வீச்சில் பலியான வாலிபர் உடல் சென்னை வந்தது
-=-