லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஸ்மி காடு பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது அந்த பேருந்து தாக்கப்பட்டது. இது குறித்து ஓட்டுநர் அவத் பிஹாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கல்வீச்சில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்தன. காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் ஓட்டுநர் அனைத்து பயணிகளையும் வேறு பேருந்துக்கு மாற்றினார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். தாக்குதல் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் ஆராயப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கல்வீச்சின் போது அந்த பேருந்தில் பிரபல தொலைக்காட்சியின் செய்தியாளர் ரவீஷ்குமாரும் பயணித்தார். அவர் தாக்குதல் தொடர்பான போட்டோக்களை வெளியிட்டார்.

பல பயணிகள் 112 ஹெல்ப்லைனை அழைத்தனர். ஆனால் எந்த பதிலும் இல்லை. பின்னர் அவர் கோரக்பூரின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் சொன்னார்.

அதன் பிறகே போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர். இது குறித்து பேசிய போலீசார் தாக்குதல் பற்றி உரிய விசாரணைக்கு பிறகே  சொல்ல முடியும் என்று கூறியிருக்கின்றனர்.