செய்தியாளர்கள் மீது சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல்!

சென்னை:

.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கட்டுப்பாட்டில், சென்னை கூவத்தூரில் உள்ள் இரு விடுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் பலர் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

கல்வீசும் நபர்களில் ஒருவர்

அந்த எம்.எல்.ஏக்களுக்கு உணவு சரிவர கிடைக்கிறதா என்பதை உறுதி செய்யும்படி கூவத்தூரை உள்ளடக்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று காலை அப்பகுதி வட்டாட்சியர், டி.எஸ்.பி. தலைமையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் சென்ற வாகனங்களை அங்கு எம்.எல்.ஏக்களை கண்காணித்துக்கொண்டிருக்கும் சசிகலா ஆதரவாளர்களும், அவர்கள் பு நியமித்துள்ள  தனியார் பாதுகாவலர்களும் தடுத்து நிறுத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு செய்தியாளர்கள் ஓட்டல் வளாகத்துக்குள் சென்றார்கள். அப்போது சசிகலா ஆதரவாளர்களும், தனியார் பாதுகாவலர்களும் செய்தியாளர்கள் மீது கல்வீசி தாக்கினர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

You may have missed