வாஷிங்டன்

மெரிக்காவில் புயல்லுப் நகர காவல்துறையினர் கொரோனா குறித்து திருடர்களுக்கு ஒரு வினோதமான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைர்ஸ் எந்த ஒரு பொருளின் மீதும் படிவதால் அதைத் தொடும் அனைவருக்கும் அந்த வைரஸ் பாதிப்பு உண்டாக பெருமளவில் வாய்ப்பு உள்ளது;   எனவே கையுறை, முக கவசம் ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார மையம் தெரிவித்த்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக சிறைச்சாலைகளில் இருப்போரைக் காணப் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.   கைதிகள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடையாமல் இருக்க இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிககவில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள புயல்லுப் நகர காவல்துறை இதையொட்டி புது வித எச்சரிக்க விடுத்துள்ளது.

அந்நகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

நமது ஊரில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் திருடர்கள் உள்ளிட்ட அனைத்து குற்றச்செயல் புரிவோரும் உங்கள் குற்றங்களைச் சிறிது காலத்துக்கு நிறுத்தி வையுங்கள். 

அவ்வாறு நிறுத்தி வைப்பதற்காக எங்கள் நன்றியை நாங்கள் முன் கூட்டியே தெரிவித்துக் கொள்கிறோம்,  மீண்டும் நீங்கள் எப்போது உங்கள் குற்றங்களைத் தொடங்கலாம் என நாங்கள் கூறுகிறோமோ அப்போது ஆரம்பியுங்கள்

எனத் தெரிவித்துள்ளது.