மன் கி பாத் போதும், ‘கன்’ கி பாத்தை ஆரம்பிங்க: உத்தவ் காட்டம்!

 

Stop Maan Ki Baat, Start Gun KI Baat : Uddav Thackeray to PM Modi

 

பிரதமர் மோடி ‘மன் கி பாத்’ (மனதோடு பேசுகிறேன்) தை நிறுத்திக் கொண்டு, ‘கன் கி பாத்’ தை(துப்பாக்கியுடன் பேசுதல்) தொடங்க வேண்டும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

 

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து நமது வீரர்களைக் கொல்வதும், அவர்களது உடல்களைச் சிதைப்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மனதோடு பேசும் நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தானுக்கு துப்பாக்கிகள் மூலம் தக்க பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

பிரதமர் மோடியின் மன்கிபாத் நிகழ்ச்சியை, கூட்டணிக் காட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்ட்ராவில் ஆளும் பாஜகவுக்கும், அதன் நெருங்கிய கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கும் உரசல் வலுத்து வருகிறது.