நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்துங்கள்: ஸ்டாலின்

சென்னை:

ண்டுதோறும் நரபலி கேட்கும் நீட் நுழைவு தேர்வை நிறுத்த வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்லின் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த ஆண்டு முதல் மருத்துவம் படிப்பதற்கு நாடு முழுவதும் ஒருவகையான நுழைவு தேர்வு முறையை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த ஆண்டு நீட் தேர்வு காரணமாக, தனது மருத்துவ கனவு கலைந்து போனதால், மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதுபோல, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி மத்திய அரசு வஞ்சித்து உள்ளது.

இதன் காரணமாக மகனை கேரளாவுக்கு அழைத்து சென்ற திருத்துறைபூண்டியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், திமுக செயல்தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கூறியிருப்பதாவது,

“தமிழக மாணவர்களை நீட் தேர்வெழுத வெளிமாநில தேர்வு மையங்களை ஒதுக்கி அவர்களை மன உளைச் சலுக்கு ஆளாக்கியதன் விளைவாக, எர்ணாகுளம் தேர்வு மையத்தில் தேர்வெழுதிய திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது”

“நீட் கொடுமையால் மருத்துவம் படிக்க முடியாமல்போன மாணவி அனிதா உயிரை சென்ற ஆண்டு பறிகொடுத்தோம். மகனுக்கு துணையாகச் சென்ற தந்தை கிருஷ்ணசாமியை மன உளைச்சலால் இந்த ஆண்டு பறிகொடுத்துள்ளோம்.

நீட் தேர்வால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். ஆண்டு தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வை நிறுத்த வேண்டும்”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.