வதந்திகளை தடுத்து நிறுத்து: ‘வாட்ஸ்ஆப்’ நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி:

மூக வலைதளமான வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு, வதந்திகள் குறித்த செய்திகள் பரவாதவாறு தடுத்து  நிறுத்தும்படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் மூலம் பரவும் வதந்திகள் காரணமாக பல்வேறு இடங்களில் அப்பாவிகள் தாக்கப்படு வதும், போராட்டங்கள் நடைபெற்று வருவதும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக குழந்தை கள் கடத்தல் குறித்த வதந்தி காரணமாக நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற கொடுஞ்செயல்களுக்கு சமூக வலைதளங்கள் காரணம் என்று குற்றம் சாட்டுப்பட்டு வரும் நிலையில், இதில் அதிக முக்கியத்துவம் பெற்று வருவது வாட்ஸ்அப் என்ற மொபைல் செயலி என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், வாட்ஸ்ப் செயலி மூலம் போலியான வதந்திகள் பரவாதவாறு  தடுக்க வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், போலி வதந்திகளை அடையாளம் கண்டு அவற்றை உடனே தடுத்து, அகற்ற வேண்டும் என்றும், உடனே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.