மாதவிடாய் குறித்து சர்ச்சை பேசிய ஸ்ம்ரிதி இரானி கருத்துக்கு சித்தார்த் பதிலடி

மாதவிடாய் குறித்த மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கருத்துக்கு நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். பெண்களின் சுகாதாரத்தை காப்பதற்கு தான் நேப்கின்கள் பயன்படுகின்றன, மாதவிடாய் ஏற்படுவது ஒன்றும் அவமானம் இல்லை என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

siddrth

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியிடம் சபரிமலை விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மாதவிடாய் ரத்தம் படிந்த நேப்கினை நண்பர்கள் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியுமா? முடியாது. நமது நண்பர்கள் வீட்டுக்கே அதை எடுத்து செல்ல முடியாத போது, கோயிலுக்குள் எப்படி எடுத்து செல்ல முடியும்? என்று பதில் கேள்வி கேட்டார்.

மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் அவருக்கு கண்டனம் தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு தளங்களில் விவாதமும் உருவானது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த், ஸ்ம்ரிதி இரானியில் பேச்சுக்கு மூன்று விதமான பதில்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதில், “கோயிலுக்கு வரும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் டயபர் அணிந்து வருகின்றனர். பெண்கள் சுகாதாரத்தை காப்பாதற்கு தான் நேபின்கள் பயன்படுத்தப்படுகின்றன. நேபின்களை பெண்கள் கோயிலுக்குள் கொண்டு செல்வதால், அதன் புனிதம் கெட்டுவிடாது. மாதவிடாய் ஏற்படுவது அவமானம் இல்லை” என சித்தார்த் பதிவிட்டுள்ளார்.