நியூயார்க்:

மைதியை விரும்பினால், எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள் என்று ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சையது அக்பருதீன் பாகிஸ்தானுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்த செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுடனான வர்த்தக உடன் பாடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் அரசு எடுத்து வருகிறது. இதையடுத்து நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து மூடிய அறைக்குள்  ஆலோனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் சயீது அக்பருதீன், “பயங்கரவாதத்தால் காஷ்மீர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.  அவர்களிடம் இருந்து எங்கள் மக்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறியவர், இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்பினால், முதலாவதாக எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை நிறுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

மேலும்,  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்.  இதில் யாரும் தலையிட முடியாது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி மக்கள் சமூக, பொருளா தார ரீதியாக முன்னேறுவார்கள்.  காஷ்மீரில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக சிலர் சித்தரிக் கின்றனர். அங்கு முழு அமைதி நிலவுகிறது.

குறிப்பிட்ட ஒரு நாடு மட்டுமே ஜிகாத் என்ற பெயரில் காஷ்மீரில் வன்முறையை தூண்ட முயற்சிக்கிறது. அதனை முறியடிப்போம்.

இவ்வாறு ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன்  கூறினார்.