உங்கள் மண்ணில் பிரசாரத்தை நிறுத்துங்கள்: பாக்.பிரதமர் இம்ரான்கானுக்கு ஓவைசி அறிவுரை

ஐதராபாத்:

 உங்கள் மண்ணில் பிரசாரத்தை நிறுத்துங்கள் இம்ரான்கான், என்று பாக்.பிரதமருக்கு ஓவைசி அறிவுரை கூறி உள்ளார். திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா ஜாஃபர் குறித்து பேசி வருவது குறித்து, ஓசைசி இம்ரான்கானுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வரு கிறது. அதையடுத்து நடைபெற்ற விமான தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்ட் நிலையில், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரட்டி யடிக்கப்பட்டு வருகின்றன. இந்த தாககுதலின்போது,  விமானப் படை விமானி அபிநந்தன் , பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி விடுதலை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,ஏ ஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பாகிஸ்தான் பிரதமருக்கு அறிவுரை தெரிவித்துள்ளார்.

உங்கள் நாட்டில் முதலில் இதுபோன்ற பிரசாரங்களை நிறுத்துங்கள் என்று கூறியிருப்ப துடன்,  உங்கள் மண்ணில் என்ன நடக்கிறது என்பதை  இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் நன்றாக அறிவார்கள்.

உங்களுக்கும், லஷ்கர்-இதொய்பா, ,ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தொடர்புகள் குறித்து தெரியும் என்றவர், திப்பு சுல்தான் மற்றும் பஹதுர் ஷா ஜாஃபர் குறித்து தவறாகப் பேசாதீர்கள் என்று அறிவுரை கூறி இருப்பதுடன், உங்களிடம் ஒரு அணு அணுகுண்டு இருந்தால், அது இந்தியாவில் கூட உள்ளது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளர்.

ஏற்கனேவே சமீபத்தில், அபிநந்தன் விவகாரத்தில்,  பாகிஸ்தான் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்று  ஒவைசி வேண்டுகோள் விடுத்து விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.