வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி என்று மமாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தோற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.
சென்னை அருகே உள்ள வேலூர் மாவட்டத்திலும் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில்,  3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்கறி, மளிகைக்கடைகள் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மட்டுமே செயல்படும் என்றும் துணிக்கடைகள்,  நகைக்கடைகள் இறைச்சி கடைகள் ஞாயிறு, வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயங்கும் என மாவட்ட மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .