புயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது: இல.கணேசன்

சென்னை:

புயல் பாதித்த பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பாஜக தேசிய செயலாளர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இல.கணேசன்

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் உள்ள சாலைகளில் மரங்கள் மின் கம்பங்கள் சரிந்துள்ளதால், அவற்றை அகற்றிவிட்டே உள்பகுதிக்கு செல்ல முடிகிறது. இதன் காரணமாக சற்று கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால்,  நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறி பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் கார்களை மறித்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பின்புலமாக அரசியல் இருந்து வருவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இதன் காரணமாக போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு நிவாரண பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளும் மற்றும் ஊழியர்கள்  செல்ல பயப்படுகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் நிவாரண பணிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போராட்டம் நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இல.கணேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மேலும், புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லும் அமைச்சர்களை மக்கள் முற்றுகை யிட்டு போராட்டம் நடத்து சரியல்ல என்றும்,   நிவாரணம் கிடைக்காவிட்டால் கோஷங்கள் மூலம் மக்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வைக்கலாமே தவிர வன்முறையில் ஈடுபடக்கூடாது.

தமிழக அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது என்றவர், .முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எத்தகைய வேகத்துடன் மேற்கொண்டதோ, அதேபோல் நிவாரண உதவி வழங்குவதிலும் வேகமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

கார்ட்டூன் கேலரி