டில்லி

ட இந்தியாவில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு மழை மற்றும் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வட இந்தியாவில் 5 மாநிலங்களில் திடீரென புழுதிப் புயல் உண்டாகியது.  அதைத் தொடர்ந்து இடி மின்னலுடன் மழைபெய்தது.   இதில் 124 பேர் உயிரிழந்தனர்.  மேலும் 300 பேர் காயமடைந்தனர்.    தற்போது மற்றொரு புயல் மற்றும் மழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம், ”காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேச மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை, குறிப்பாக பனிக்கட்டி மழை பெய்யக்கூடும்.  உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும்.

அசாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களி;, கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.   அரியானா, சண்டிகர், மேற்கு உத்திரப்பிரதேசம் டில்லி ஆகிய இடங்களில் புழுதிப்புயலுக்கும் கடும் மழைக்கும் வாய்ப்புள்ளது” என அறிவித்துள்ளது.