சென்னை:

மிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் ஏப்ரல் 1ந்தேதி ஃபனி புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி ஃபனி புயல்: மீட்புப் படையினருக்கு சுற்றறிக்கை முலம் விழிப்புணர்வுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி வரும்  காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 36 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியிருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும் என்றும், அது வரும்  30-ஆம் தேதி தமிழக பகுதியில் கரைகடக்க வாய்ப்புள்ளது. அந்த சமயம்,  மணிக்கு  90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் பலத்த மழையும் கொட்டும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் இது 27, 28 ஆம் தேதிகளில் புயலாக வலுப் பெற்று தற்போதைய நிலவரப்படி வடத் தமழிக கடலோரப் பகுதியையொட்டி நகரக்கூடும். இதனால், மீனவர்கள் 25, 26 தேதிகளில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும், 27, 28 ஆம் தேதிகளில் தென் மேற்கு வங்கக் கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக டிஜிபி, ‘தமிழகத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி புயல் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, மாநில கார்ட்ஸ். ஊர்க்காவல்படையினர்  உள்பட அனைத்து தரப்பினரம் நகர,  மாவட்ட தலைமை யகங்களில் உஷார் நிலையில் தேவையான உபகரணங்களுடன் தயாரா இருங்கள் என்றும்  தெரிவித்து உள்ளார்.