வங்க கடலில் புயல் சின்னம்: நாளை முதல் தென்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை:

ங்க கடல் பகுதியில் நாளை புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதால் தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன்.  அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது. இது மேலும் வலுவடைந்து நாளை புயலாக மாறுகிறது.

இதன் காரணமாக வங்கக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரை வங்கக்கடலில் காற்று வீசக்கூடும். எனவே வரும் 7ந்தேதி வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த   புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும். இதன் காரணமாக தென் மாவட்டங் களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், மண்டபம் பகுதியில்- 4 செ.மீ., ஆலங்குடியில்- 2 செ.மீ., பேராவூரணியில் 1 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அக் 1 முதல் இன்று வரை இயல்புக்கு அதிகமாக 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai Metorlogical centre, heavy rain, Puviyarasan, southern district, Storm symbol, Storm symbol in the Bay of Benga, Storm symbol in the Bay of Bengal
-=-