கடலூர்,

ங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இதனால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய வங்கக் கடலில் ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரைக்கு 330 கி.மீ., தென் கிழக்கே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது. அது நாளை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தின் பாம்பன், கடலூர் ஆகிய துறைமுகங்களிலும், புதுச்சேரி துறைமுகத்திலும்  1 ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.