Random image

ஆந்திரா, ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை

ஐதராபாத்:

ஒடிசா, ஆந்திராவில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்க கடலின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உருவாகி உள்ள புயல் மந்தநிலையில் காணப்படுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்திற்குள் தீவிரமடையும். ஆந்திராவின் கலிங்கபட்டணம் பகுதியில்310 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூர் பகுதியில் 300 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வீச கூடும் என அஞ்சப்படுகிறது. விசாகப்பட்டனம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் ஒடிசாவில் கஜபதி, கஞ்சம், குர்தா, நயாகர், பூரி மாவட்டங்களை தாக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.