பத்து வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் புகைப்படத்தின் கண்ணீர் கதை

கமதாபாத்

ற்போது வைரலாகி வரும் ஒரு பாட்டியும் அவருடைய பேத்தியும் கண்ணீர் விடும் புகைப்படத்தின் உண்மைக்கதை வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒரு பள்ளிச் சிறுமியும் ஒரு வயதான மூதாட்டியும் கண்ணீர் விடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.    அந்த படத்துடன் வரும் விவரப்படி அந்த மாணவியின் பாட்டியான அவரை வலுக்கட்டாயமாக முதியோர் இல்லத்தில் சேர்த்ததை அறிந்து அந்த சிறுமி கண்ணீர் விடுவதாக கூறப்பட்டிருந்தது.

அந்த புகைப்படத்தின் உண்மைக் கதை இதோ :

அந்த புகைப்படம் தற்போது தெரிவித்துள்ளது போல் இப்போது எடுக்கப்பட்டது இல்லை.  கடந்த 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.   அதை எடுத்தவர் புகைப்பட பத்திரிகையாளர் கல்பேஷ் என்பவர்.   அவர் இது குறித்த உண்மைக் கதையை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அகமதாபாத் மணி நகரில் உள்ள ஒரு பள்ளி மாணவிகள் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்றனர்.   அங்குள்ள முதியோருடன் மாணவிகளை புகைப்படம் எடுக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார்.   அவருக்கு அங்கு ஒரு சோக அனுபவம் கிடைத்துள்ளது.

கல்பேஷ்  அந்த மாணவிகளை தனித்தனியாக ஒவ்வொரு முதிய பெண்மணிகளுடன் புகைப்படம் எடுக்க விரும்பினார்.   அதன்படி அவர் ஏற்பாடு செய்த போது அங்கிருந்த மாணவி ஒருவர் ஒரு மூதாட்டியை கட்டிக் கொண்டு கண்ணீர் விடுவதைக் கண்டார்.   விசாரித்ததில் அந்த மூதாட்டி மாணவியின் சொந்த பாட்டி என்பதும் அவரை உறவினர் வீட்டிற்கு அனுப்புவதாக சொல்லி மாணவியின் பெற்றோர் இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கல்பேஷ், ”இந்த உண்மை தெரியாமல் நான் புகைப்படம் எடுத்தேன்.   உண்மை தெரிந்ததும் நாங்கள் அனைவரும் அதிர்ந்து போனோம்.    எங்களால் கண்ணீரை அடக்க முடியவில்லை.  நான் இதை ஊடகங்களில் அப்போது வெளியிட்டேன்.    இது அப்போது கடுமையான விவாதத்துக்கு உள்ளானது.” என தெரிவித்தார்.

இந்த மாதம் 19 ஆம் தேதி உலக  புகைப்பட தினத்தை ஒட்டி கல்பேஷ் இந்த புகைப்படத்தை மீண்டும் வெளியிடவே அந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.

அந்த பாட்டி முதியோர் இல்லத்தில் இருப்பதை பெற்றோர் மாணவிக்கு ஏன் மறைத்தார்கள் என்பதற்கும் அதன் பிறகு அந்த  பாட்டியின் நிலை என்ன ஆயிற்று என்பதற்கும் இன்று வரை  விடை இல்லை.

You may have missed