“அசைவ உணவை தவிர்த்தார்.. 30 கிலோ எடையை குறைத்தார்’’ சிம்புவின் உடல் மெலிந்த ரகசியம்..

 

நடிகர் சிம்பு, இப்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்காக சிம்பு, 30 கிலோ எடையை குறைத்துள்ளார்.

அவர் உடல் மெலிந்த ரகசியம் என்ன?

சிம்புவின் நண்பர் ஒருவருக்கு நெருக்கமான சந்தீப் ராஜ் சென்னையில் ஜிம் வைத்துள்ளார். அவரிடம் கடந்த ஒரு வருடமாக உடல் எடையை குறைக்க பயிற்சி பெற்று வந்துள்ளார், சிம்பு.

பயிற்சியை ஆரம்பித்த போது, சிம்புவின் எடை 101 கிலோ. பல்வேறு கடுமையான உடற்பயிற்சிகள் செய்ததன் விளைவாக அவர் எடை இப்போது 71 கிலோவாக குறைந்துள்ளது.

ஆம். 30 கிலோ எடையை குறைத்துள்ளார், சிம்பு.

அசைவ உணவு சாப்பிடுவதை அறவே தவிர்த்தார். பெரும்பாலும் திரவ உணவே அருந்தினார். தனக்கான உணவை அவரே தயார் செய்து கொள்வார்.

உடற்பயிற்சி தவிர டென்னிஸ், கைப்பந்து ஆகிய விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டதோடு, பாக்சிங், நீச்சல் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டு,புதிய மனிதனாக மாறியுள்ளார், ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு.

– பா.பாரதி