மனஅழுத்தம்: சென்னையில் மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை…!

சென்னை:

வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சென்னையில் இன்று மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது காவலர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் அயனாவரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்துள்ள நிலையில், மீண்டும் ஒரு காவல் ஆய்வாளர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

காவலர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துவருவது சக காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் 56 வயதான  ஜோசப். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்களுக்கு வேலைப்பளு காரணமாக, அதை தவிர்க்க எண்ணி குடிப்பழகத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவருக்கு இரவு பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மனம் உடைந்த ஜோசப், குடித்துவிட்டு, பணிக்கு செல்லாமல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இதுகுறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பணிச்சுமை காரணமாக தொடர்ந்து காவலர்கள் தற்கொலை செய்து வருவது தொடர்ந்து வருகிறது.