Random image

ஊழல் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை : மோடி எச்சரிக்கை

டில்லி

ழல் செய்யும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கி அதிகாரிகள் மீது ஆதாரமின்றி கடன் வழங்குவது, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட பல புகார்கள் எழுந்துள்ளன.   இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.   ஆயினும் அவ்வாறு குற்றம் புரியும் வங்கி அதிகாரிகள் மீது பல நேரங்களில் வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்படுகின்றன.

இது குறித்து இந்திய வங்கிகள் சங்கம் சென்ற மாதம் 21 ஆம் தேதி ஒரு கூட்டம் நடத்தியது.   அப்போது வங்கி அதிகாரிகள் மீது தேவையற்ற விசாரணைகள் மற்றும் கைதுகள் நிகழ்வதாக அதிகாரிகளால் புகார் தெரிவிக்கபட்டது.   இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தலைமையில் ஒரு  குழு அமைத்து அந்தக் குழுவால் இத்தகைய புகார்கள் விசாரிக்க வேண்டும் என கோரிக்கையும் அளிக்கப்பட்டது.

கடந்த 27 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சார்பில் அரசு பிரதிநிதிகளும் வங்கி அதிகாரிகளும் கலந்துக் கொண்ட கூட்டம் ஒன்றௌ நடைபெற்றுள்ளது.   அப்பொது பிரதமர் மோடி ”வங்கி அதிகாரிகள் மீது லஞ்சம், ஊழல் போன்ற குற்றங்கள் சம்பந்தப்பட்ட புகார்கள் வருவது தவறானது,  இதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.   அவ்வாறு ஊழல் மற்றும் லஞ்சம் உள்ளிட்ட பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடும் வங்கி அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்” என எச்சரித்தார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட மேற்கண்ட அறிவிப்பு உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.   இதற்கு வங்கி அதிகாரிகள் இடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.