Random image

பெற்றோர்களை தவிக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை : கேரள அரசு

திருவனந்தபுரம்

முதியோர்களை கவனிக்காமல் தவிக்க விடும் அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள் உள்ளிட்ட அனத்து உறவினர் மீதும் கடும் நடவடிக்கை என கேரள அரசு அறிவித்துள்ளது.

உலகெங்கும் பல முதியவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினரால் கைவிடப்பட்டு தவித்து வருகின்றனர். இவர்களைத் தவிர குழந்தைகள் மற்றும் வாரிசு இல்லாத ஏழை முதியவ்ர்களும் கவனிப்பார் இன்றி தவித்து வருகிறர். கேரள அரசு இவ்வாறு குழந்தைகள் இல்லாத முதியோருக்காக பதினாறு இல்லங்கள் நடத்தி வருகிறது. அதில் 834 முதியோர் தங்கி உள்ளனர். இந்த இல்லங்களில் வசிப்போர்களுக்கு எந்த உறவினரும் இருக்கக் கூடாது என்பதே அடிப்படை தகுதியாகும்.

ஆனால் பல முதியோர்கள் உறவினர்கள் இருந்த போதிலும் கவனிக்க யாரும் இல்லாத காரணத்தினால் இல்லங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதை ஒட்டி பல முதியவர்கள் இந்த இல்லங்களை விட்டு வெளியெறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வெளியேறும் முதியவர்கள் இது குறித்து அரசிடம் முறையிட்டனர்.

அர்சு அதை ஒட்டி புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது குறித்து கேரள அரசின் சமூக நீதித் துறை துணை இயக்குனர் சுபாஷ், “கேரள அரசு முதியோர்களை ஆதரவின்றி தவிக்க விடும் குழந்தைகள், பேரக்குழந்தைகள், மற்றும் முதியோர்களின் சொத்துக்கான வாரிசுகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அவ்வாறு ஆதரவின்றி கைவிடப்பட்டு இல்லங்களில் உள்ள முதியோர்களிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த தகவல்கள் அனைத்து மாவட்ட மற்றும் தாலுக்கா அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுளன. உடனடியாக அந்த முதியவர்களின் புகார்கள் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும் எதிர்காலத்தில் இவ்வாறு முதியவர்களை தவிக்க விடுவோருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும். அது மட்டுமின்றி ஆதர்வற்ற முதியோரை இல்லத்தில் சேர்த்து கவனிக்கவும் வட்டார சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.