சென்னை

ரும் 8 மற்றும் 9 தேதிகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு எதிரான கொள்களைகளை மத்திய அரசு கடைபிடித்து வருவதாக நாடெங்கும் புகார் எழுந்துள்ளது.  ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் கூடி ஆலோசனை செய்தன. அதை ஒட்டி இந்த 10 தொழிற்சங்கங்களும் இணைந்து வரும் 8 மற்றும் 9 தேதிகளில் தேசிய அளவில் வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளன.

நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்துக் கொள்வதாக பொதுத் துறை வங்கி ஊழியர்களில் சில பிரிவினர் அறிவித்துள்ள்னர். வங்கிப் பணிகள் இதனால் பாதிப்பு அடையலாம் என அன்சப்படுகிறது. அத்துடன் தமிழக அரசு பணியாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதனால் தமிழக அரசு,”வரும் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துக் கொள்ளும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அராசு நிர்வாகம் பாதிக்கப்பட்டால் அனைத்து துறை ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை நிறுத்தத்தன்று எந்த ஊழியரும் விடுப்பு எடுக்கக் கூடாது. அத்துடன் ஒப்பந்தப் பணியாளர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துக் கொள்ளக் கூடாது. மீறி அவர்கள் பங்கேற்றால் பணியில் இருந்து நீக்கப்ப்படுவார்கள் என எச்சரிக்கப்படுகிறது “ என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.