இன்று முதல் மேற்கு வங்கத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு

கொல்கத்தா

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழுமையான கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது  இதுவரை இங்கு கிட்டத்தட்ட 25000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 827 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   மரணமடைந்தோர் எண்ணிக்கை விகிதம் மிகவும் அதிகமாக உள்ளதால் மேற்கு வங்க அரசு தொற்று பரவுவதைத் தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

அவ்வகையில் இன்று முதல் மாநிலத்தின் கட்டுப்பாடு மண்டலம் மற்றும் இடையக மண்டலம் ஆகிய இரு பகுதிகளிலும் கடுமையான ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  இந்த பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் மட்டுமே அரசு மூலமாக வழங்கப்பட உள்ளன.  இந்த ஊரடங்கில் பசுமை மண்டலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முழு ஊரடங்கில் மருந்துக் கடைகள் திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அனைத்து அரசு மற்றும் தனியார் வாகன இயக்கம் அடியோடு தடை செய்யப்பட்டுள்ளது  சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மற்றும் இ ரிக்‌ஷாக்களும் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.     மிகவும் அவசரத் தேவைகளுக்கு ஒரு சில இடங்களில் மூன்று சக்கர ரிக்‌ஷக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

இதில் மால்டா பகுதியில் அதாவது இந்திய வங்க தேச எல்லையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் இங்கு ஊரடங்கு மேலும் க்டுமையாக்கப்பட்டுள்து.   முன்பிருந்தே இந்த பகுதியில் அத்தியாவசிய பொருட்களைத் தவிர மற்ற  பொருட்கள் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.