டெல்லி:
ரடங்கு வழிகாட்டுதல்களை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் மே 31ந்தேதி 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அத்துடன்  புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 பேர்கள் வரை கூடுவதற்கு அனுமதியும், இறப்பு மற்றும் இறுதி நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை உறுதி செய்வதோடு 20 பேர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது. பொது இடங்களில் மது, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.
கடைகளில் பொருட்களை வாங்க செல்லும்போது, ஒரு நபர் 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். ஒரு கடையின் முன்பு 5 வாடிக்கையாளர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது உள்பட பல்வேறு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமபடி அறிவுறுத்தி உள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188வது பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,  ஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்கக் கூடாது, தேவைப்பட்டால் ஊரடங்கை மாநில அரசுகள் மேலும் கடுமையாக்கி கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.