டெல்லி

பொதுத்துறை வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மாத சம்பளம் பெற முடியாமல் லட்சக்கணக்கானோர் கடும் அவதிக்குள்ளானார்கள்.

வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசின் சீர்த்திருத்தங்களை கைவிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் முற்றிலும் முடங்கின


இந்ப்போராட்டத்தில் இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும்,  தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் பேரும் பங்கேற்றனர்.  தமிழகத்தில் உள்ள பொதுத்துறை, தனியார் துறையைச் சேர்ந்த 7,000 வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் காரணமாக காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிப்பணிகளும், சேவைகளும் பாதிக்கப்பட்டன. இன்று மாதத்தின் கடைசி நாள் என்பதால் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர்.