கலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை: சட்டமன்றத்தில் முதல்வர் எச்சரிக்கை

சென்னை:

மிழகத்தில் கலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர்கள் ஸ்டாலின் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

அதற்கு பதில் அளித்து இறுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அப்போது,  தமிழகத்தில் கலவரத்தை தூண்டி விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை பேணி காக்கப்படுகிறது என்று கூறினார். மேலும், தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறிய முதல்வர் கடந்த 3 ஆண்டுகள் நடைபெற்றுள்ள குற்றங்கள் குறித்து பேசினார்.

மேலும், தமிழகத்தில்  சில அமைப்புகள் போராட்டத்தின் வாயிலாக கலவரத்தை தூண்டிவிடுகின்றன. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.