தம்பியின் திருமணத்தை சிறப்பிக்க லண்டனில் இருந்து புறப்பட்டு வந்த சிம்பு…!.

தமிழ் சினிமாவில் கல்யாண வயதை தாண்டியும் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளாமல் காலத்தை கடத்தி வந்தவர்களில் விஷால், சிம்புவை உதாரணமாக கூறலாம்.

அண்மையில் விஷாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்து வரிசையில் இருப்பவர் சிம்பு . இவரிடமிருந்து அறிவிப்பு ஏதாவது வரும் என எதிர்ப்பார்த்து இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது சிம்புவின் தம்பி குறளரசன் திருமணம் செய்தி.

இன்று குறளரசனின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.. தனது சகோதரர் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார் சிம்பு.

இந்த திருமணத்தைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இதில், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி