6.2 ரிக்டர் அளவில் இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

டிமோர்:

ந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிமோர் தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கட்டிங்கள் குலுங்கின. மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிக்கு வந்தனர்.

இந்தோனேசியாவின் டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிங்கள் குலுங்கின. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேவந்து சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவலும் வெளியாகவில்லை

இன்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.