சென்னை

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை அடுத்து சென்னை மெரினா கடற்கரையிலும் தலைமை காவல்துறை அதிகாரி அலுவலகத்திலும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகை இட போராட்டக்காரர்கள் சென்ற போது வன்முறை வெடித்தது.   அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் மரணம் அடைந்தனர்.   மேலும் 60க்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.   இதை எதிர்த்து இன்று தூத்துக்குடியில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது.

இன்று சென்னையில் மெரினா கடற்கரையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   சென்னை காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி அலுவலக பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.   காவல்துறையின் 3 இணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.