வலுவான மாநிலங்களே, நாட்டை வலிமையானதாக மாற்றும்! மமதா பானர்ஜி கருத்து

டெல்லி: சக்திவாய்ந்த மாநிலங்கள் தான், ஒரு நாட்டை வலுப்படுத்தும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார்.

கர்நாடகா, பஞ்சாப், மத்திய பிரதேசம் என 7 மாநிலங்கள் உருவான நாள் இன்று. அது தவிர, லட்சத்தீவுகள், புதுச்சேரி, அந்தமான், நிகோபர் தீவுகள்  ஆகிய யூனியன் பிரதேசங்களும் உருவான நாளாகும்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கர்நாடகா, கேரளா,அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் உருவான நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கு மனதார வாழ்த்துகள்.

மாநிலங்கள் வலிமை அடையும் போது தான், இந்தியா வலுப்பெறும். ஆகவே, மாநிலங்களை வலிமையாக்க பாடுபடுவேன் என்றார்.