புயலை தொடர்ந்து பலத்த காற்று: திருச்சி விமான சேவை முடங்கியது

--

திருச்சி:

நாகை மாவட்டத்தல் அதிகாலை கஜா புயர் கரையை கடந்த நிலையில் இன்னும் பல மாவட்டங் களில் அதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது.

தொடர்ந்து பலமாக காற்றும், மழையும் பெய்து வருவதால் மீட்பு பணிகளிலும் தொய்வடைந்து உள்ளது.

இந்த நிலையில் திருச்சி பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால்,  சென்னை – திருச்சி nவிமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 36 பேருடன் திருச்சி சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.

காற்றின் வேகம் குறைவதை பொறுத்து விமான சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.