நடிகர் ராதாரவி வீட்டு முன் போராட்டம்!: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிப்பு

--

சென்னை:

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும்படி பேசிய நடிகர் ராதாரவி வீட்டு முன் இன்று போராட்டம் நடத்த  இருப்பதாக “அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் (TARATDAC)” அறிவித்துள்ளது.

நடிகரும் அரசியல் பிரமுகருமான ராதாரவி சில நாட்களுக்கு முன் அ.தி.மு.கவில் இருந்து மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில், வைகோ மற்றும் ராமதாஸை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் ஒப்பிட்டு அவதூறாக பேசிய ராதாரவியின் மேடைப்பேச்சு வீடியோ சமூவலைதளங்களில் பரவியது.

அவரது பேச்சை பல தரப்பினரும் கண்டித்தனர் தி.மு.க. எம்.பியான கனிமொழியும் கண்டித்தார்.

இந்த நிலையில்,  மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும்படி பேசிய நடிகர் ராதாரவி வீட்டு முன் இன்று போராட்டம் நடத்த  இருப்பதாக “அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள்  மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் (TARATDAC)” அறிவித்துள்ளது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.