மான்செஸ்டர்: டெஸ்ட் அரங்கில் 500 விக்கெட்டுகள் என்ற சாதனையை எட்டினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
இதன்மூலம், இந்த மைல்கல்லை எட்டிய உலகின் 7வது வீரர் மற்றும் இங்கிலாந்தின் 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். விண்டீஸ் அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில், இவர் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இந்த சாதனையை எட்டியுள்ளார்.
இவர் 140 டெஸ்ட் போட்டிகளை ஆடி, 501 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக, இங்கிலாந்தின் ஆண்டர்சன்(589) இந்த சாதனையை செய்திருந்தார்.
உலகளவில், இலங்கையின் முரளிதரன்(800), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன்(708), இந்தியாவின் கும்ளே(619), இங்கிலாந்தின் ஆண்டர்சன்(589), ஆஸ்திரேலியாவின் மெக்ராத்(563), வெஸ்ட் இண்டீசின் வால்ஷ்(519) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர்.
ஸ்டூவர்ட் பிராட்டிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சக நாட்டு வீரர் ஆண்டர்சன், தனது சாதனையை அவர் முறியடிக்கும் வாய்ப்பு உள்ளதென்றும் கூறியுள்ளார்.