சென்னை: தமிழகத்தில் மிகவும் பழமையான  சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி உள்பட 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு  தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித் து ள்ளது. இது மாணவ சமுதாயத்தின்ர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டில், பல்கலைக்கழக இணைப்பு அனுமதி பெறாத 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

இத்நத் நிலையில், தற்போது  100 ஆண்டு பழமைவாய்ந்த சென்னை லேடி வெல்லிங்டன் பிஎட் காலேஜ் உள்பட 4 அரசு பிஎட் கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 ஆசிரியா் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும்   தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

ஆனால், நடப்பாண்டில், தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் விண்ணப்பித்து அனுமதி பெற வில்லை என்று கூறப்படுகிறது. மேலும், போதிய இடவசதி ஆசிரியர் வசதிகளும் பல கல்லூரி களில் இல்லாததால், மொத்தம் 71 பிஎட் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை மெரினாவில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி போதிய ஆவணங் களை சமர்ப்பிக்காததால் அங்கு பி.எட். சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் புதுக்கோட்டை அரசு பி.எட். கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

திருமயம் அரசு பி.எட். கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் என்சிடிஇ விதிப்படி நியமிக்காததால் அங்கும் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பெரும்பாலான பிஎட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்கப்படட்டுள்ளது, மாணவ சமுதாயத்தினரிடையேயும், கல்வியாளர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.