சினிமா படப்பிடிப்பு வேன் மோதி மாணவர் மரணம் : ஓட்டுனர் கைது

சென்னை

சென்னையில் போரூர் அருகே ஒரு திரைப்பட படப்பிடிப்பு வேன் மோதி கல்லூரி மாணவர் மரணம் அடைந்ததால் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள நெருகம்பாக்கத்தில் பூமாதேவி நகரில் வசிப்பவர் சந்திர சேகர்.   இவருடைய 19 வயது மகன் நிதிஷ் வடபழனியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து  வந்தார்.  அவர் தினமும் பைக்கில் கல்லூரிக்கு செல்வது வழக்கம்.  நேற்று முன் தினம் நிதிஷ் பைக்கில் கல்லூரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

அவர் ஆற்காடு சாலையில் வளசரவாக்கம் அருகே செல்லும் போது அவருக்கு முன் சென்ற ஒரு ஆட்டோ திடீரென நின்றது.    அதனாலந்த ஆட்டோ மீது மோதிய நிதிஷ் கீழே விழுந்தார்.   அப்போது பக்கவவாட்டில் வேகமாக வந்துக் கொண்டிருந்த திரைப்பட படப்பிடிப்பு வேன் அவர் மீது மோதியதில் நிதிஷ் படுகாயமடைந்தார்.

அங்கு இருந்தவர்கள் நிதிஷை உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.    அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.   இதை ஒட்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.   அந்த வேனை ஓட்டி வந்த சதீஷ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.