மாணவி துர்கா தற்கொலை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்…

மதுரை: நீட் தேர்வு பயம் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி துர்கா குடும்பத்தி னருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் பழனிச்சாமி, விடா முயற்சியை வளர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் என மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், மதுரை மாணவி துர்கா, நீட் தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில்,  மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மன உறுதியோடு, விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது உறுதி என்று மாணவர்களுக்கு நம்பிக்கை வார்த்தையை அவர் தெரிவித்துள்ளார்.