டில்லி

ள்ளிக் கழிப்பறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் இறந்து கிடந்தது கடும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டில்லி குர்கானில் உள்ள சர்வதேச பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவர் பிரத்யுமன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக இருந்தார்.   இந்த வழக்கில் காவல்துறையினர் முதலில் பள்ளி பேருந்து நடத்துனரை கைது செய்தனர்.  பின்பு சிபிஐ விசாரணையில் அதே பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவர் இந்தக் கொலையை செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

நேற்று வடகிழக்கு டில்லியின் கார்வாள் நகரில் உள்ள ஒரு பள்ளியில் துஷ்கர் (வயது 16) என்னும் 9 ஆம் வகுப்பு மாணவர் பள்ளிக் கழிப்பறையில் பேச்சுமூச்சின்றி கிடந்துள்ளார்.   அவரி மற்ற மாணவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  அங்கு அந்த மாணவர் இறந்த நிலையில் எடுத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகம் மாணவர் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறி உள்ளது.   ஆனால் பெற்றோர் சில மாணவர்கள் துஷ்கருடன் தகராறு செய்துள்ளதாகவும் அவர்களால் தங்கள் மகன் கொல்லப்பட்டதாகவும் கூறி உள்ளனர்.    இதையொட்டி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.   மாணவனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

மாணவர்கள் அடுத்தடுத்து பள்ளிக் கழிப்பறையில் இறந்து கிடப்பது டில்லியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.