மாணவரும் நுகர்வாளரே : கல்வி நிலையத்தின் மீது புகார் அளிக்கலாம் – நுகர்வோர் ஆணையம்

கோரேகாவ்

மாணவரும் ஒரு நுகர்வாளர் என்னும் முறையில் கல்வி நிலையத்தின் மீது புகார் அளிக்கலாம் என மும்பை மாநில நுகர்வாளர் ஆணையம் கூறி உள்ளது.

கோரேகாவ் பகுதியில் உள்ள ஒபராய் சர்வதேச பள்ளியில் படித்து வந்த மாணவர் ஆதித்யா. அவரை தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் தடை செய்தது. அதனால் அவருடைய தாய் மும்பை புறநகர் நுகர்வாளர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தப் பள்ளி தனது சேவையை சரிவர செய்யவில்லை எனினும் நியாயமான முறையில் வர்த்தக முறையை நிறைவேற்ற வில்லை எனவும் ஆதித்யாவின் தாய் வழக்கு மனுவில் தெரிவித்திருந்தார்.

அந்த மனுவை மாணவரை ஒரு நுகர்வாளர் என கருத முடியாது என்னும் பள்ளியின் வாதத்தை ஏற்று ஆணையம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து ஆதித்யாவின் தாய் மகாராஷ்டிர மாநில நுகர்வாளர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையிட்டு வழக்கில் அந்த பெண்மணி தனது சார்பாக ஆஜராகி அவரே வாதாடினார். அப்போது ஒரு மாணவனை நுகர்வாளர் என கருதக்கூடிய வகையில் உள்ள பள்ளிகளின் ஒரு சில விதிமுறைகளை அந்தப் பெண்மணி சுட்டிக் காட்டினார்.

அதை ஒட்டி ஆணையம் தேர்வுகள் நடத்துவது சட்டபூர்வமான கடமை எனவும் அது மாணவருக்கு அளிக்கும்சேவை இல்லை எனவும் தெரிவித்தது. எனவே மாணவர் இந்த விவகாரத்தில் நுகர்வாளராக கருதாடலாம் என கருத்து தெரிவித்தது. மேலும் சட்டபூர்வமான பொறுப்பை எந்த ஒரு கல்வி நிறுவனமும் செய்யாத போது அதை எதிர்த்து புகார் அளிக்க மாணவருக்கு உரிமை உண்டு எனக் கூறி உள்ளது.

அத்துடன் இந்த விவகாரத்தில் மாணவரை நுகர்வாளராகக் கருதி அவருக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டை உடனடியாக பளி நிர்வாகம் அலிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. அரசு மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவின் பரிந்துரைகளை கல்வி நிறுவனம் நிறைவேற்றாத போது அது குறித்து மாணவர்கள் புகார் அளிக்கலாம் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.