சென்னை:
மிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு ஜூன் 10ந்தேதி தொடங்கும் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை பல ஆண்டுகளாக அண்ணா பல்கலைக் கழகம் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் தமிழகஅரசின் தொழில்நுட்ப கல்வி இயக்கம் நடத்தி வருகிறது.
இந்த நிலையில்,  தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில்  பொறியியல் படிப்புக்காக அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான  சுமார் 1,72, 148 (ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148)  அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம்  தொடங்க உள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக நேற்று உயர்கல்வித்துறையினருடன் நடைபெற்ற ஆலோசனையைத் தொடர்ந்து தமிழக என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியே பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் அறிவித்து உள்ளது.
அதன்படி,  வருகிற ஜூன் 10ந்தேதியில் ஆன்லைன் பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.