சென்னை:

ல்லூரி மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்தஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி திலகவதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக ஆகாஷ் என்னும் இளைஞனை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திலகவதி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் , “திலகவதி படுகொலை ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தமிழக காவல்துறை மீது  நம்பகத்தன்மை இல்லை என்று குற்றம் சாட்டியவர், இந்த விவகாரத்தில்,  காவல்துறை யினருக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் சாதி, மதம் அல்லது அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கு அவர்கள் பணியக்கூடிய போக்கு  உள்ளதாக குற்றம்சாட்டினார். மாணவி திலகவதி கொலை வழக்கை   சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று  திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.