நெடுவாசல் போராளி வளர்மதி, சிறையில் உண்ணாவிரதம்!

கோவை:

நெடுவாசலில் போராடி வரும மக்களுக்கு ஆதரவாக நோட்டீஸ் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சேலம் மாணவி வளர்மதி சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார்.

தமிழகத்தில் டெல்டா பகுதியான தஞ்சை சுற்றுவட்டார பகுதியினா  நெடுவாசல்,கதிராமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜி, ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷெல்கேஸ் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, மக்களுடைய போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து துண்டு பிரசாரம் விநியோகித்தார்.

இதன் காரணமாக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  சிறையில் தன்னைப் பார்க்க வருபவர்களை உளவுத்துறை தொடர்ச்சியாக மிரட்டி வருவதைக் கண்டித்தும் , இதற்குக் காரணமான உளவுத்துறை மற்றும் அவர்களுக்கு சட்ட விரோதமான தகவல்களை அளித்துவரும் சிறைத்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்யக்கோரியும்,

இதுகுறித்து உரிய விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,  தன்மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை எந்தவித நிபந்தனையுமின்றி உடனே திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை முன்வைத்தும்,

சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகளான வாய்தாவுக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்வ தைத் திட்டமிட்டே போலீசார்  நிராகரித்து வருவதையும், கண்டித்து கோவை சிறையில் மாணவி வளர்மதி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி உள்ளார்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.