மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாது! உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி

டெல்லி:

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் நேற்று மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறைக்களமாக மாறிய நிலையில்,  மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாது, மாணவர்கள் போராட்டம் ஓய்ந்த பிறகு, அதுகுறித்து விசாரணை நடத்தலாம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே கருத்து தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில், அண்டை நாடுகளான
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில்,  டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகங்களான ஜாமியா, அலிகார், மற்றும் ஜேஎன்யு பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் வன்முறையான நிலையில், காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக் காரர்களை கலைத்தனர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர்.

மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மாணவர்கள் என்பதா லேயே, அவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது. நிலமை கட்டுக்குள் வந்த பிறகு இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், இப்போதுள்ள மனநிலையில் நம்மால் எதையும் தெளிவாக முடிவு செய்ய முடியாது. முதலில் கலவரங்கள் அடங்கட்டும்” என்று கூறி உள்ளார்.